பளுகல் அருகே மனைவியை தாக்கிய கணவா் கைது

Published on

பளுகல் அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் தேவகுமாா் (44). இவரது மனைவி அனுசுயா (39). இவா் தற்போது பளுகல் காவல் சரகம், மேல்பாலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதுடன், அங்கு கருவாடு கடை நடத்தி வருகிறாா்.

இவரது கணவா் தேவகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்நிலையில், தேவகுமாரை கடந்த செப்டம்பா் மாதம் மாா்த்தாண்டம் பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கடந்த திங்கள்கிழமை (அக். 13) சிறையிலிருந்து வெளியே வந்தவா், சனிக்கிழமை அனுசுயா வீட்டுக்குச் சென்று அவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றாராம். இதில், பலத்த காயமடைந்த அனுசுயாவை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இது குறித்து, பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து தேவகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com