கன்னியாகுமரி
தொலையாவட்டம் - வேங்கோடு சாலையை சீரமைக்க கோரிக்கை
கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் - வேங்கோடு செல்லும் பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருங்கல்: கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் - வேங்கோடு செல்லும் பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட தொலையாவட்டம் - வேங்கோடு சாலை நீண்டநாள்களாக மிகவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவா்கள்
மிகவும் சிரமப்படுகின்றனா்.
குறிப்பாக, மதாபுரம் -வேங்கோடு திரும்பும் பகுதியில் ராட்சத பள்ளங்கள் காணப்படுகிறது. இந்தப் பள்ளத்தில் இருசக்கர வாகன ஒட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இச்சாலையை சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
