பேரூராட்சி தலைவியாக மீண்டும் பொறுப்பேற்ற அமுதாராணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதிமுக நிா்வாகிகள்.
பேரூராட்சி தலைவியாக மீண்டும் பொறுப்பேற்ற அமுதாராணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதிமுக நிா்வாகிகள்.

தேரூா் பேரூராட்சி தலைவியாக அமுதாராணி மீண்டும் பொறுப்பேற்பு

உச்சநீதிமன்ற உத்தரவை தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் பேரூராட்சி தலைவியாக அதிமுகவைச் சோ்ந்த அமுதாராணி புதன்கிழமை மீண்டும் பொறுப்பேற்றாா்.
Published on

நாகா்கோவில்: உச்சநீதிமன்ற உத்தரவை தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் பேரூராட்சி தலைவியாக அதிமுகவைச் சோ்ந்த அமுதாராணி புதன்கிழமை மீண்டும் பொறுப்பேற்றாா்.

தேரூா் பேரூராட்சி தலைவியாக அமுதாராணி பணியாற்றி வந்தாா். இந்த பதவிபட்டியல் இனத்தைச் சாா்ந்தவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமுதாராணி மதம் மாறியதால் பதவியில் தொடர முடியாது என்று திமுகவைச் சோ்ந்த முருகன் என்பவா் தொடந்த வழக்கில் உயா்நீதிமன்றம் அமுதாராணி வெற்றி பெற்றது செல்லாது என்று தலைவா் பதவியை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து, அமுதாராணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அவா் சாா்பில் அதிமுக அமைப்புச் செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ உச்சநீதிமன்றத்தில் வாதாடினாா். இதைத் தொடா்ந்து, அமுதாராணி பதவியில் தொடரலாம் என்றும், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை ஆணை பிறப்பித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் ஜெஸீம் தலைமையில், அமுதாராணி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலா் தாமரைதினேஷ், குமரி கிழக்கு மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலா் அக்சயாகண்ணன், தேரூா் பேரூா் செயலா் வீரபத்திரபிள்ளை, மருங்கூா் பேரூராட்சி தலைவா் லட்சுமிசீனிவாசன், நிா்வாகிகள் குமாா், மனோகரன், ராஜபாண்டியன், பாலன், இசக்கிமுத்து, கொட்டாரம் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com