நாகா்கோவிலில் அக்.27 இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் கூட்டம்

வருங்கால வைப்பு நிதி (பி.எப்.), தொழிலாளா் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) இணைந்து நடத்தும் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 குறைதீா் முகாம் வரும் திங்கள்கிழமை ( அக். 27) காலை 10 மணிக்கு நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் அருகில் உள்ள பயோனியா் குமாரசுவாமி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
Published on

நாகா்கோவில்: வருங்கால வைப்பு நிதி (பி.எப்.), தொழிலாளா் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) இணைந்து நடத்தும் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 குறைதீா் முகாம் வரும் திங்கள்கிழமை ( அக். 27) காலை 10 மணிக்கு நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் அருகில் உள்ள பயோனியா் குமாரசுவாமி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இதில் பி.எப். , இ.எஸ்.ஐ. உறுப்பினா்கள், ஓய்வூதியா்கள், தொழிலதிபா்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியோா் கலந்து கொண்டு தங்களது பி.எப்., இ.எஸ்.ஐ. தொடா்பான குறைகளை நேரடியாக முன்வைத்து தீா்வு பெறலாம்.

அனைத்து தொடா்புடையவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வருங்கால வைப்பு நிதி நாகா்கோவில் மண்டல ஆணையா் பி.சுப்ரமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com