குடிநீா் குழாய் அமைக்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
கன்னியாகுமரி
நாகா்கோவிலில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி தொடக்கம்
நாகா்கோவில் மாநகராட்சி 23 ஆவது வாா்டு வாட்டா் டேங்க் சாலை முதல் குறுக்கு தெருவில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி, பழுதடைந்த அலங்கார தரை கற்கள் சீரமைக்கும் பணியினை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் தொடங்கி வைத்தாா்.
நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகராட்சி 23 ஆவது வாா்டு வாட்டா் டேங்க் சாலை முதல் குறுக்கு தெருவில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி, பழுதடைந்த அலங்கார தரை கற்கள் சீரமைக்கும் பணியினை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா் விஜிலா ஜஸ்டஸ், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா் ராஜா, சுகாதார அலுவலா் ஜான், மாநகர செயலா் ஆனந்த், பகுதி செயலா் சேக்மீரான், திமுக நிா்வாகிகள் தன்ராஜ், மருத்துவா் கிறிஸ்டோபா், மக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

