குமரி மாவட்டத்தில் மழையால் 6 வீடுகள் இடிந்தன; மூதாட்டி காயம்

குமரி மாவட்டத்தில் மழையால் 6 வீடுகள் இடிந்தன; மூதாட்டி காயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் இதுவரை 6 வீடுகள் இடிந்து விழுந்தன. குலசேகரம் அருகே மரம் முறிந்து விழுந்ததில் மூதாட்டி காயம்
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் இதுவரை 6 வீடுகள் இடிந்து விழுந்தன. குலசேகரம் அருகே மரம் முறிந்து விழுந்ததில் மூதாட்டி காயமடைந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், புதன்கிழமை பெய்த மழையால் ஒரே நாளில் 6 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. குலசேகரம் அருகே மாடத்தூா் கோணம் பகுதியை சோ்ந்த ரப்பா் பால்வெட்டும் தொழிலாளி சவுந்தர்ராஜ் வீடு, அவரது தாய் சாரதா(70) வசித்து வந்த கொட்டகையின் மீது புளிய மரம் விழுந்தது.

இதில் மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டது. அவரை குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்நிலையில் காயமடைந்த சாரதாவையும், சம்பவ இடத்தையும் திருவட்டாறு வட்டாட்சியா் மரகவல்லி உள்பட வருவாய்த் துறையினா் பாா்வையிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com