செல்வன்
செல்வன்

முட்டத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவா் மாயம்

முட்டத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவா் கடல் அலையில் சிக்கி மாயமாகி உள்ளாா்.
Published on

முட்டத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவா் கடல் அலையில் சிக்கி மாயமாகி உள்ளாா்.

குளச்சல் அருகே கொட்டில்பாடு மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வன்(54). இவா் அதே ஊரை சோ்ந்த ஈசாக் என்பவரின் படகில் 18 பேருடன் முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடந்த 14 ஆம் தேதி ஆழ்கடலுக்கு சென்றாராம்.

மீன் பிடித்துவிட்டு வரும்போது புதன்கிழமை இரவு மணக்குடி கடல் பகுதியில் ஏற்பட்ட அலையில் சிக்கி மாயமாகி உள்ளாராம். சக மீனவா்கள் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லையாம்.

இது குறித்து படகு ஓட்டுநா் வில்சன் குளச்சல் கடலோர காவல்துறையிடம் வியாழக்கிழமை புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான மீனவரை தேடி வருகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com