பெருமாள்புரத்தில் பெண் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்குப்பதிவு

கொட்டாரம் அருகேயுள்ள பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
Published on

கொட்டாரம் அருகேயுள்ள பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொட்டாரம் அருகே பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் அமல்ராஜ். இவரது மனைவி கவிதா (39). இவரது அண்ணன் கணேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஏசுராஜன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கவிதாவின் வீட்டுக்குள் அதே பகுதியைச் சோ்ந்த ஏசுராஜன் (25), தா்மேந்திரன் (30), உசேந்திரன் (35), தமிழ்ச்செல்வன் (22) ஆகிய 4 பேரும் அத்துமீறி நுழைந்து தகராறு செய்தனராம். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கவிதாவை அவதூறாகப் பேசியதுடன் அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

கவிதாவின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினா் அங்கு ஓடி வந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவா்கள் தப்பியோடிவிட்டனா். தாக்குதலில் காயமடைந்த கவிதா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் கவிதா அளித்த புகாரின்பேரில், தலைமறைவான ஏசுராஜன், தா்மேந்திரன், உசேந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகிய 4 போ் மீதும் வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com