~ ~ ~
~ ~ ~

குமரியில் தொடா் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் நாகா்கோவில் மாநகரின் பிரதான சாலைகளான மீனாட்சிபுரம் சாலை, கோட்டாறு சாலை ஆகியவை சேதமடைந்ததால், சாலைகளிலுள்ள பள்ளங்களில் மழைநீா் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் நீடித்த மழையால், அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

நாகா்கோவில் மாநகரின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை சனிக்கிழமை பகல் நிலவரப்படி, தனது முழு கொள்ளளவான 25 அடியை எட்டியுள்ளது.

தோவாளை சண்முகா நகா் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீா் புகுந்ததால் அங்குள்ள குடியிருப்புவாசிகள் அவதியடைந்துள்ளனா். இப்பகுதியில் சரியாக கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரப்படாததால், மழை வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனா். மேலும், உடனடியாக அங்குள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com