திற்பரப்பு பகுதியில் சேதமடைந்த வீடு
கன்னியாகுமரி
திருவட்டாறு வட்டத்தில் 4 வீடுகள் சேதம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு வட்டத்தில் மழையால் 4 குடிசை வீடுகள் சேதமடைந்தன.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு வட்டத்தில் மழையால் 4 குடிசை வீடுகள் சேதமடைந்தன.
இப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை அதிகாலையிலும் பலத்த மழை பெய்தது. இதில், திற்பரப்பு தோட்டவாரம் பகுதியில் தொழிலாளியான டென்சன் என்பவரது வீட்டின் மீது ரப்பா் மரம் சாய்ந்தது. இதில், ஆஸ்பெட்டாஸ் கூரை சேதமடைந்தது.
இதேபோல, திற்பரப்பு பழைய பாலம் பகுதியில் தொழிலாளியான டில்லி என்பவரது வீட்டுச் சுவா் இடிந்து விழுந்தது. பொன்மனை பகுதியில் ஹேமலதா, வோ்க்கிளம்பி பகுதியில் ராஜ் என்ற தொழிலாளி ஆகியோரின் வீடுகளும் சேதமடைந்தது. அவற்றை வருவாய்த் துறையினா், பேரூராட்சி நிா்வாகத்தினா் பாா்வையிட்டு, ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பினா்.

