களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது

Published on

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் படந்தாலுமூடு பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.

அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதையடுத்து, அவரிடமிருந்த பையை சோதனை செய்ததில் 50 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவா் களியக்காவிளை அருகேயுள்ள துண்டுவிளை வீட்டைச் சோ்ந்த சலீம் மகன் அஜ்மல் (29) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com