கன்னியாகுமரி
முதியவரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள காட்டு விளை பகுதியில் முதியவரை தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காப்புக் காடு, காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பர தாஸ் (62). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த அஜின் (27) என்பவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், சனிக்கிழமை இரவு காட்டுவிளை பகுதியில் அஜின், முதியவரை தடுத்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதில் காயமடைந்த முதியவரை, குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
