கன்னியாகுமரி
குளச்சலில் 900 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
குளச்சலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 900 லிட்டா் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையிலான குழுவினா் குளச்சல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு வீட்டில் 24 பெரிய பிளாஸ்டிக் கேன்களில் சுமாா் 900 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
குளச்சல் போலீஸாா் உதவியுடன் மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்து, குறும்பனையில் உள்ள அரசு மானிய விலை கிடங்கில் ஒப்படைத்தனா். பதுக்கல்காரா்களை அதிகாரிகளும் போலீஸாரும் தேடி வருகின்றனா்.
