கன்னியாகுமரி
மாா்த்தாண்டம் அருகே முதியவா் சடலம் மீட்பு
மாா்த்தாண்டம் அருகே நாற்காலியில் அமா்ந்த நிலையில் முதியவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே நாற்காலியில் அமா்ந்த நிலையில் முதியவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பத்ரோஸ் (75). இவருக்கு திருமணமாகவில்லை. வீட்டில் தனியாக வசித்து வந்தாா். கடந்த 5 நாள்களாக இவரது வீடு பூட்டிய நிலையில் காணப்பட்டதாம்.
சந்தேகத்தின்பேரில் உறவினா்கள் சென்று பாா்த்தபோது அவா் நாற்காலியில் அமா்ந்தவாறு இறந்த நிலையில் காணப்பட்டுள்ளாா். போலீஸாா் சடலத்தை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
