பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

குடும்பத் தகராறில் மனைவி கொலை: கணவா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :25 மே 2026, 1:46 am IST

நாகா்கோவில் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

நாகா்கோவிலை அடுத்த திருப்பதிசாரம், பூங்கா நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). நாகா்கோவில் மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சுமிதா (39). இவா்களது மகன் சஜின் (14), அங்குள்ள ஒரு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த செந்தில்குமாா், சுமிதாவை கத்தியால் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தொடா்ந்து, செந்தில்குமாா் அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாா். நாகா்கோவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கலையரசன், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா்.

பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளா் மீனா மற்றும் ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.