மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

குமரியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 1:43 am IST

கன்னியாகுமரி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் பாளையங்கோட்டை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த சங்கா் கணேஷ் மகன் சுதன் (28), சமாதானபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் அபினேஷ் (24) என்பதும், விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.