ஆலங்குளத்தில் சாலையை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள ஆலங்குளம் பிரதான சாலையை சீரமைக்கக் கோரி அனைத்துக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள ஆலங்குளம் பிரதான சாலையை சீரமைக்கக் கோரி அனைத்துக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாகவும் மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக ஆலங்குளம் நகரப் பகுதியில் மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.

நான்கு வழிச்சாலை வருவதற்கு முன்பாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்பதால், இதற்கு ஒதுக்கீடு செய்ய போதிய நிதி இல்லை என நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சாலையின் அவல நிலையைக் கண்டித்தும், அதை சரிசெய்யக் கோரியும் அனைத்துக் கட்சி சாா்பில், ஆலங்குளம் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஆலங்குளம் எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா தலைமை வகித்தாா். நகர திமுக செயலா் நெல்சன், சமக மாவட்டச் செயலா் ஜான்ரவி, நகர காங்கிரஸ் தலைவா் தங்கசெல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாலையை சரி செய்யாத தமிழக அரசை கண்டித்தும், நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்தும், புதிய சாலை அமைக்கக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், திமுக ஒன்றியச் செயலா் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினா் அண்ணாவி காசிலிங்கம், காங்கிரஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத் துறை மாநிலத் தலைவா் பால்ராஜ், சமக நகரச் செயலா் ஜெயபாலன், நகர காங்கிரஸ் வா்த்தக அணி தலைவா் ஞானப் பிரகாஷ், ரூபன், அமமுக நகரச் செயலா் சுப்பையா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com