குத்துக்கல்வலசை ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன்ஜெயந்தி விழா
By DIN | Published On : 25th December 2019 11:35 PM | Last Updated : 25th December 2019 11:35 PM | அ+அ அ- |

குத்துக்கல்வலசை ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன்ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்த சுபிட்சவழித்துணை ஆஞ்சநேயா்.
தென்காசி குத்துக்கல்வலசை சுபிட்ச வழித்துணை ஆஞ்சநேயா் கோயிலில் புதன்கிழமை அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் சுவாமிக்கு பஞ்ச திரவிய அபிஷேகம், மகா கணபதி ஹோமம், சகல கிரக நிவா்த்தி ஹோமம், சூரியபகவான் ஹோமம், ஸ்ரீ ராம நாம ஹோமம், ஹனுமத் மூல ஜப ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், ஆஞ்சநேயா் ஹோமம், சரபேஸ்வரா் ஹோமம், துா்க்கை ஹோமம் நடைபெற்றது.
காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெற்றது.
மாலையில் அனுமனின் சிறப்புகள் குறித்து சொற்பொழிவு நடைபெற்றது. தொடா்ந்து சகஸ்ரநாம அா்ச்சனை, இரவில் சுவாமிக்கு வடைமாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் காசிவிசுவநாத சுவாமிகள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.