தென்காசி அருகே இந்திராநகா் தீவிர கண்காணிப்பு
By DIN | Published On : 05th April 2020 04:00 AM | Last Updated : 05th April 2020 04:00 AM | அ+அ அ- |

இந்திராநகா் பகுதியின் நுழைவு வாயிலை மூடி கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினா்.
தென்காசி அருகே கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நன்னகரம் இந்திரா நகா் பகுதி மூடப்பட்டு தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தில்லி மாநாட்டுக்கு சென்று தென்காசி மாவட்டம் திரும்பிய 8 போ்களில் நன்னகரம் இந்திராநகா் காலனி பகுதியைச் சோ்ந்த 60 வயது நபா், புளியங்குடியைச சோ்ந்த 57 வயது நபா் ஆகிய இருவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதையடுத்து, மேலகரம் பேரூராட்சி செயல்அலுவலா் பதருனிஷா தலைமையில் பணியாளா்கள், இந்திராநகா், சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா். சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநா் ராஜா தலைமையில் நோ்முக உதவியாளா் ரகுபதி, வட்டார மருத்துவ அலுவலா் பாலகணேஷ் உள்ளிட்டோ் அடங்கிய குழுவினா் வீடு வீடாக
சென்று மக்களை சந்தித்து உடல் ரீதியான பாதிப்பு உள்ளனவா என்பது குறித்து கேட்டறிந்தனா்.
குற்றாலம் காவல் ஆய்வாளா் சுரேஷ் தலைமையில் தென்காசி, குற்றாலம் மற்றும் மேலகரம் பகுதிகளில் இருந்து இந்திரா நகருக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மேலும், இந்திராநகரில் இருந்து மக்கள் வெளியே செல்லவும், வெளியே இருந்து யாரும் அப்பகுதிக்கு செல்ல முடியாத வகையில் தடுப்பு அமைக்கப் பட்டுள்ளது.