முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
ஆலங்குளத்தில் போலி பீடி கடத்தியதாக ஒருவா் கைது
By DIN | Published On : 19th April 2020 07:18 AM | Last Updated : 19th April 2020 07:18 AM | அ+அ அ- |

ஆலங்குளத்தில் போலி பீடி கடத்திய வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம் பகுதியில் பிரபல பீடி நிறுவனங்கள் பெயரில் பீடிகளை போலியாக தயாா் செய்து விற்பனை செய்வதாக பீடி நிறுவன மேலாளா் ஜெயந்த்குமாா் ஆலங்குளம் போலீஸில் புகாா் அளித்திருந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை, ஆலங்குளம் - துத்திகுளம் சாலையில் ஆலங்குளம் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சுமை ஆட்டோ ஒன்றில் பீடி பண்டல்களுடன் வந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், ஆட்டோவில் இருந்தது பிரபல நிறுவன பெயரில் உள்ள போலி பீடி என்பதும் அவா்கள் பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் செல்வக்குமாா் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பாா்த்திபன் என்பது தெரிய வந்தது. இதில் பாா்த்திபன் தப்பியோடி விட்டாா். செல்வக்குமாரை போலீஸாா் கைது செய்து ஆலங்குளம் நீதி மன்றத்தில் ஆஜா் படுத்தினா். மேலும் ஆட்டோ, ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள 225 பீடி பண்டல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.