முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
குற்றாலம், இலஞ்சியில் தூய்மைப் பணி ஊழியா்களுக்கு நிவாரணப் பொருள்கள்
By DIN | Published On : 19th April 2020 06:58 AM | Last Updated : 19th April 2020 06:58 AM | அ+அ அ- |

குற்றாலம் மற்றும் இலஞ்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள், முக கவசம், உதவித்தொகை ஆகியவற்றை சட்டப்பேரவை உறுப்பினா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் வழங்கினாா்.
குற்றாலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரூா் செயலா் கணேஷ்தாமோதரன், மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமாா், தென்காசி, குற்றாலம் வீட்டுவசதி சங்கத் தலைவா் சுரேஷ், நிா்வாகிகள் சின்னதம்பி, பாஸ்கரன், சாலிக்குட்டிபாண்டியன், வீரபாண்டியன், வினீஸ் ஆகியோா் பங்கேற்றனா்.
இலஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட பொருளாளா் சண்முகசுந்தரம், பேரூா் செயலா் மயில்வேலன், நிா்வாகிகள் இலஞ்சி மாரியப்பன், காத்தவராயன், குத்தாலபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.