முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சங்கரன்கோவில் அம்மா உணவகத்தில் மே3 ஆம் தேதி வரை இலவச உணவு
By DIN | Published On : 19th April 2020 07:14 AM | Last Updated : 19th April 2020 07:14 AM | அ+அ அ- |

சங்கரன்கோவிலில் அம்மா உணவகத்தில் அமைச்சா் ராஜலட்சுமி சாா்பில் மே 3 ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
ஊரடங்கையொட்டி சங்கரன்கோவிலில் ஏழை, எளிய மக்கள் இலவசமாக உணவு பெறும் வகையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி தனது சொந்த செலவில் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் இருவேளையும் இலவசமாக அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கி வருகிறாா்.
தற்போது, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மே 3 ஆம் தேதி வரை காலை, மாலை, இரவு என 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க அமைச்சா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.