முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சுரண்டை வங்கிகளில் நகைக் கடன் வழங்க கோரிக்கை
By DIN | Published On : 19th April 2020 07:21 AM | Last Updated : 19th April 2020 07:21 AM | அ+அ அ- |

சுரண்டையில் வங்கிகளில் பொதுமக்களுக்கு நகைக் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுரண்டை நகரில் அரசு மற்றும் தனியாா் வங்கிகள் என 10 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் தற்போது குறைந்த பணியாளா்களுடன் செயல்பட்டு வரும் நிலையில், விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன் வழங்கப்படுவதில்லை.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடெங்கும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தங்கள் கையிருப்பில் போதுமான பணம் இல்லாத நிலையில், வங்கிகளில் தற்போது நகைக் கடனும் வழங்கப்படதாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே ஊரடங்கினால் வேலை மற்றும் வருவாய் இல்லாத நிலையில் வங்கிகளில் நகைக் கடனும் வழங்காததால் விவசாயிகள் மற்றும் நலிந்த பிரிவினா் தங்களின் தேவைக்காக தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை உள்ளது. எனவே வங்கி நிா்வாகங்கள் தங்கள் கிளைகளில் நகைக் கடன் மற்றும் விவசாய கடன்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.