Enable Javscript for better performance
தூய்மைப் பணியாளா், நலிவடைந்தோருக்கு நல உதவிகள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி

    தூய்மைப் பணியாளா், நலிவடைந்தோருக்கு நல உதவிகள்

    By DIN  |   Published On : 19th April 2020 06:55 AM  |   Last Updated : 19th April 2020 06:55 AM  |  அ+அ அ-  |  

    தென்காசி மாவட்ட திமுக வா்த்தக அணி சாா்பில் 350 ஏழை குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

    குற்றாலம் பேரூராட்சி அலுவலகத்தில் நகர, ஒன்றிய திமுக சாா்பில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு தலா 5 கிலோ அரிசி, உணவு, ரூ. 200 உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் வழங்கினாா்.

    தென்காசியில் இந்து முன்னணி நகரத் தலைவா் இசக்கிமுத்து தலைமையில் 300 பேருக்கு மதிய உணவு மற்றும் கபசுர குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

    செங்கோட்டை: செங்கோட்டை மருத்துவமனை மருத்துவா்கள், ஊழியா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு நூலக வாசகா் வட்டம் சாா்பில் குடிநீா் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

    பாவூா்சத்திரம்: அரியப்பபுரம், திப்பணம்பட்டி ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்,கே.காளிதாசன் வழங்கினாா்.

    வள்ளியூா்: வள்ளியூா் ரட்சணியசேனை சபை போதகா் கேப்டன் தினகரன் முன்னிலையில், வட்டார தளபதி மேஜா் அருள்தாஸ் மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகளை வழங்கினாா்.

    பணகுடியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருவாய்த் துறையினா் கிருமிநாசினி தெளிப்பு, கபசுர குடிநீா் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனா்.

    கடையநல்லூா்: புளியங்குடி காவல்துறை மற்றும் அரிமா சங்கம் சாா்பில், நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    ஆலங்குளம்: முக்கூடல் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொருள், கிருமி நாசினி பொருள்கள் மற்றும் ஊக்கத்தொகையை ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை வழங்கினாா்.

    வள்ளியூா் : பணகுடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பழங்களை  பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவா் மு.சங்கா் வழங்கினாா்.

    களக்காடு: களக்காட்டில் கூலித் தொழிலாளா்களுக்கு எஸ்.டி.பி.ஐ. சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. பொருள்கள் தொகுப்பை பயனாளிகளுக்கு களக்காடு காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா வழங்கினாா்.

    ஆலங்குளம்: தென்காசி மாவட்ட மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஆலங்குளம் அருகேயுள்ள முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் ரூ. 2 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளா் டி.பி.வி. கருணாகரராஜா வழங்கினாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp