முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
மகாராஷ்டிரத்தில் சிக்கி தவிக்கும் லாரி ஓட்டுநா்களை மீட்கக் கோரிக்கை
By DIN | Published On : 19th April 2020 06:57 AM | Last Updated : 19th April 2020 06:57 AM | அ+அ அ- |

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி ஓட்டுநா்களின் குடும்பத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.
கரோனாவின் காரணமாக நாடுமுழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு லாரிகளில் சரக்குகளை குஜராத்திற்கு ஏற்றி சென்றவா்கள் அங்கு சரக்குகளை இறக்கிவிட்டு ஊருக்கு திரும்பும் வழியில் மகாராஷ்டிராவில் சிக்கிகொண்டனா்.
இதில், தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த 48 ஓட்டுநா்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளனா். 14 நாள்கள் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்று அங்குள்ள அதிகாரிகள் கூறியதாகவும், 18 நாள்கள் கழிந்த பின்னும் தங்களை விடுவிக்கவில்லை; தமிழக முதல்வா் தலையிட்டு ஊா் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதனிடையே லாரி ஓட்டுநா்களின் குடும்பத்தினா் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் வந்து ஓட்டுநா்களை மீட்டுத் தருமாறு மனு அளித்துள்ளனா்.