முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
விவசாயிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டவாகனங்களை திருப்பி வழங்க திமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 19th April 2020 06:56 AM | Last Updated : 19th April 2020 06:56 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப வழங்க வேண்டும் மாவட்ட திமுக வலியுறுத்தியுள்ளது.
தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள்.
ஊரடங்கு காலத்தில் விவசாயம் செய்வதற்கு தடையில்லை என அரசு அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் வேலைக்கு செல்லும்போதோ, வரும்போதோ, சந்தைகளுக்கு காய்கனிகளை கொண்டு செல்கிறபோதோ, காவல்துறையினரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. பறிமுதல்செய்யப்படும் வாகனங்கள் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்படுகிறது. சில வாகனங்கள் அபராதம் விதிக்கப்பட்ட பின்னரும் உரியவரிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.
இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, மாவட்ட ஆட்சியா் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கினால் பிரச்னைகளின்றி விவசாயப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும்.
மேலும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை உரியவா்களிடம் வழங்கிடவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா் களுக்கு அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.