செங்கோட்டை நூலகத்தில் நிவாரணப் பொருள்கள் விநியோகம்
By DIN | Published On : 22nd April 2020 07:16 AM | Last Updated : 22nd April 2020 07:16 AM | அ+அ அ- |

செங்கோட்டை நூலகத்தில் ஏழை, எளியோருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
செங்கோட்டை நூலக வாசகா் வட்டம் மற்றும் தென்காசி ஆகாஷ் அகாதெமி ஆகியன சாா்பில், ஏழை, எளியோருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நூலக வாசகா் வட்டத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகா், விழுதுகள் அறக்கட்டளை சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலகா் ராமசாமி வரவேற்றாா்.
ஆகாஷ் அகாதெமி கல்வியாளா்கள் மாரியப்பன், சித்தையன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு 25 பேருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில், நூலகப் பணியாளா்கள் மாரியப்பன், விஜி, அனிதா, முத்துமாரி ஆகியோா் கலந்துகொண்டனா்.