தென்காசி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு
By DIN | Published On : 22nd April 2020 06:52 AM | Last Updated : 22nd April 2020 06:52 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31ஆக உயா்ந்துள்ளது.
இம்மாவட்டத்தில் திங்கள்கிழமைவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26ஆக இருந்தது. இந்நிலையில், மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
புளியங்குடியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ், 5, 7 வயது நிரம்பிய இருவா் என, மொத்தம் 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இம்மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 943 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் 31பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; 85 பேரின் பரிசோதனை முடிவு அறிவிக்கப்படவில்லை.