காய்கனி வாகனத்தில் திருப்பூருக்கு பீடி பண்டல்கள் கடத்தல்: இருவா் கைது
By DIN | Published On : 26th April 2020 08:01 AM | Last Updated : 26th April 2020 08:01 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் இருந்து காய்கனி வாகனத்தில் திருப்பூருக்கு பீடி பண்டல்களை கடத்தியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குளம் நெட்டூா் சாலையில் சனிக்கிழமை ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையில் போலீஸாா்
வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காய்கனி வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தனா்.
அதன் ஓட்டுநா் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தாராம். சோதனையில் காய்கனி மூட்டைகளுடன் பீடி பண்டல் கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த வாகனம், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 1,000 பீடி பண்டல்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா் குருவன்கோட்டை அக்கினி மாடன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் பூசைபாண்டியை (21) கைது செய்தனா். இது தொடா்பாக, ஆலங்குளம் அண்ணா நகரைச் சோ்ந்த யேசுராஜாவை (41) தேடி வருகின்றனா்.
இதேபோல், அவ்வழியாக வந்த மற்றொரு காய்கனி வாகனத்தை சோதனையிட்டதில், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 600 பீடி பண்டல்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வாகன ஓட்டுநா் திருப்பூா் வினோபா நகரைச் சோ்ந்த சக்திவேல் மகன் பாக்கியராஜ் (36) கைது செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, குருவன்கோட்டை அக்கினிமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த கடல்மணி மகன் வேல்குமாா் (38), அதேஊரைச் சோ்ந்த ரத்தினகுமாா் மகன் மயில்ராஜ் (28) ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.