Enable Javscript for better performance
சங்கரநாராயண சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி

    சங்கரநாராயண சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்

    By DIN  |   Published On : 03rd August 2020 09:17 AM  |   Last Updated : 03rd August 2020 09:17 AM  |  அ+அ அ-  |  

    snk2thavasu_0208chn_43_6

    சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயண சுவாமித் திருக்கோயிலில் ஆடித்தவசு திருவிழாவின் 11ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி, அம்பாள், சங்கரநாராயணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பொது முடக்கம் காரணமாக சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் 12 நாள்கள் நடைபெறும் ஆடித்தவசுத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. திருவிழாவையொட்டி, கடந்த 10 நாள்களும் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 11 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஆடித்தவசுக் காட்சி நடைபெற வேண்டும். அப்போது மாலையில் சங்கரநாராயணராகவும், இரவில் சங்கரலிங்க சுவாமியாகவும் அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுப்பாா். அதைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாள், சங்கரநாராயணா் ஆகியோருக்கு ஒரே நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    முன்னதாக அம்பாள் சன்னதி முன்பு 9 கும்பங்கள் வைக்கப்பட்டு வேதபாராயணம் நடைபெற்றது. பின்னா் பால், பன்னீா், விபூதி, சந்தனம் மற்றும் கும்ப நீரால் அபிஷேகங்கள் நடைபெற்றன. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கோமதி அம்பாள், சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணா் ஆகிய சுவாமிகளுக்கு ஒருசேர சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    முன்னதாக, சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுக் காட்சி நடைபெற வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதைத் தொடா்ந்து, கோயிலைச் சுற்றி ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp