சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு: பூங்கோதை எம்எல்ஏ வலியுறுத்தல்

கடையம் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை வலியுறுத்தியுள்ளாா்.

கடையம் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை வலியுறுத்தியுள்ளாா்.

கடையம் பகுதியில் 25- க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில் கடவக்காடு சாலையை புதுப்பிக்க கடையம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ. 1.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை, ஆட்சியா், அரசு முதன்மை செயலா், உள்ளாட்சி மற்றும் ஊரகத்துறை செயலா், கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: கடையம் ஒன்றியப் பகுதியில் 25 சாலைகள் சீரமைக்க வேண்டும் எனவும், பல இடங்களில் சிறு பாலங்கள், வாருகால் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தேன்.

ஆனால், கடவக்காடு சாலைக்கு மட்டும் ரூ. 1.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கண்டத்தினக்குரியது.

பயனற்ற இந்தச் சாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை உடனடியாக நிறுத்த வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com