ஆலங்குளத்தில் நூலகக் கட்டடம் திறப்பு

ஆலங்குளத்தில் நூலகத்துக்கான புதிய கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளத்தில் நூலகத்துக்கான புதிய கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1966இல் தொடங்கப்பட்ட ஆலங்குளம் கிளை நூலகம் 54 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. 2008 முதல் முழு நேர நூலகமாக மாறியது. 2010இல் அப்போதைய எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு முயற்சியால் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நூலகம் கட்ட 10 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. கட்டடம் கட்டுவதற்கு 2018இல் மாவட்ட நூலக ஆணைக்குழு மூலம் ரூ. 12.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து அடிக்கல் நாட்டு விழா 27.2.19இல் நடைபெற்றது. பணிகள் முடிந்ததையடுத்து திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலா் வயலட் தலைமை வகித்தாா். திமுக வா்த்தக அணி துணைத் தலைவா் ஐயாதுரை பாண்டியன், நகர திமுக செயலா் நெல்சன், வாசகா் வட்டத் தலைவா் தங்கசெல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம்எல்ஏ பூங்கோதை கட்டடத்தைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா். நகர வியாபாரிகள் சங்கச் செயலா் உதயராஜ், சிவஞானம், நூலகா்கள் வாழ்த்திப் பேசினா்.

ஆலங்குளம் நூலகா் பழனீஸ்வரன் வரவேற்றாா். தென்காசி நூலகா் பிரம்மநாயகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com