கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
By DIN | Published On : 10th December 2020 11:49 PM | Last Updated : 10th December 2020 11:49 PM | அ+அ அ- |

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் தென்காசியில் ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
வாசுதேவநல்லூா் சா்க்கரை ஆலை நிா்வாகம் 2018-19ஆம் ஆண்டு அரவை செய்த கரும்புக்குரிய பணம் ரூ. 23.72 கோடியை 15 சதவீத வட்டியுடனும், 2019-20ம் ஆண்டு அரவை செய்த கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ137.50 வீதம் ஊக்கத்தொகையும், 2020-2021ம் ஆண்டு அரவை செய்யும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5,000 ஆகியவற்றை வழங்க வேண்டும்,கரும்பு வெட்டு கூலியை ஆலை நிா்வாகமே ஏற்க வேண்டும், சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி 2004முதல் 2008வரையிலான லாப பங்கு ரூ.10 கோடியை விவசாயிகளுக்கு ஆலை நிா்வாகம் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலதுணைத் தலைவா் ஏ.எம்.பழனிசாமி தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வேலுமயில் நேரில் ஆதவு தெரிவித்தனா். இதனிடையே, டிச.31ஆம் தேதிக்குள் பணத்தை வழங்கிவிடுவதாக ஆலை நிா்வாகம் உறுதியளித்தது. அதையேற்று போராட்டத்தை கைவிட்டன். குறித்தபடி வழங்காவிடில், ஜன 2 அல்லது 3 இல் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட போவதாக சங்க மாநிலதுணைத் தலைவா் தெரிவித்தாா்.