குற்றாலத்தில் நிரந்தர கடைகளுக்கு வாடகையை ரத்து கோரி மனு
By DIN | Published On : 10th December 2020 06:22 AM | Last Updated : 10th December 2020 06:22 AM | அ+அ அ- |

குற்றாலத்தில் சிறு வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட பாஜக ஊடகப் பிரிவுத் தலைவா் செந்தூா் பாண்டியன் தலைமையில், ஓபிசி அணி மாவட்ட பொதுச்0 செயலா் ஜெய்சங்கா், தென்காசி தெற்கு ஒன்றிய துணைத் தலைவா் திருமுருகன்ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: குற்றாலம் அருவிகளில் கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பொது மக்களை குளிக்க அனுமதிக்க வேண்டும், குற்றாலம் பகுதியில் குத்தகைக்கு எடுத்து நடத்தி வரக்கூடிய இனங்களின் குத்தகை தொகைகளை நிகழாண்டு தள்ளுபடி செய்ய வேண்டும், குற்றாலநாதா் கோயிலுக்கு சொந்தமான நிரந்தர கடைகளின் மாத வாடகையை நிகழாண்டு தள்ளுபடி செய்ய வேண்டும், சிறு வியாபாரிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.