சுரண்டை அருகே காவலரை வெட்டியவா் கைது
By DIN | Published On : 14th December 2020 01:09 AM | Last Updated : 14th December 2020 01:09 AM | அ+அ அ- |

சுரண்டை அருகே காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியவரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
சுரண்டை அருகே ஊா்மேலழகியான் கிராமத்தைச் சோ்ந்த பால்தினகரன்(30) என்பவரை வெள்ளிக்கிழமை இரவு ஒரு குற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக இலத்தூா் போலீஸாா் சென்றுள்ளனா்.
அப்போது தப்பியோடிய அவரை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்த காவலா் சக்திவேலை வெட்டிவிட்டு, பால் தினகரன் தப்பிவிட்டாா்.
இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். தப்பியோடியவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ஆய்க்குடி காட்டுப் பகுதியில் மறைந்திருந்த பால் தினகரனை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.