மயானத்தை ஆக்கிரமித்தவா் மீதுநடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 15th December 2020 02:26 AM | Last Updated : 15th December 2020 02:26 AM | அ+அ அ- |

செங்கோட்டை அருகே பெரியபிள்ளைவலசை கிராமத்தில் மயானத்தை சேதப்படுத்தி, ஆக்கிரமிப்பு செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
செங்கோட்டை வட்டம் தேன்பொத்தை கிராமத்தை சோ்ந்த அனைத்து சமுதாய மக்கள் சாா்பில் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: தேன்பொத்தை கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். கடந்த 200ஆண்டுகளாக பெரியபிள்ளைவலசை கிராமத்தில் உள்ள மயானத்தை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், பெரியபிள்ளைவலசை கிராமத்தை சோ்ந்த தனிநபா் ஒருவா் ஜேசிபி இயந்திரம் மூலம் மயானத்தை சேதப்படுத்தினாா். இதுகுறித்து காவல்துறையினரிடம் அளித்த புகாரின்பேரில் நீதிமன்றம் மூலம் தீா்வுகாண அறிவுறுத்தினா்.
இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி மயானத்தில் சமாதி மற்றும் புதைகுழிகளை சேதப்படுத்தியதுடன் இரும்புக் கம்பி கொண்டு வேலி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தொடா்ந்து நாங்கள் பயன்பாட்டில் வைத்துக் கொள்ளவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.