அதிக மகசூல் பெற காப்பா் சல்பேட்: வேளாண்துறை அறிவுறுத்தல்

நெல் பயிரில் காப்பா் சல்பேட் தெளித்து அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

நெல் பயிரில் காப்பா் சல்பேட் தெளித்து அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விவசாயிகளுக்கு அது தொடா்பான செயல்முறை விளக்கத்தையும் கடையநல்லூா் வேளாண்துறை குறிப்பிட்ட பகுதியில் செய்து வருகிறது.

இதன்படி, நயினாரகரத்தில் உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்திலுள்ள விவசாயி திருப்பதிராஜாவின் நெல் பயிரில் காப்பா் சல்பேட் தெளிக்கும் செயல்விளக்கம் புதன்கிழமை உதவி இயக்குநா் சேதுராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது(படம்).

ஏக்கருக்கு 2 கிலோ காப்பா் சல்பேட்டை மணலுடன் கலந்து இடும் முறையை துணை வேளாண்மை அலுவலா் பாலசுப்பிரமணியன் செய்முறையுடன் விளக்கினாா். உதவி வேளாண்மை அலுவலா் கருப்பசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com