தென்காசிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை

தென்காசி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
டென்23லாரி- வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ள லாரிகள்.
டென்23லாரி- வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ள லாரிகள்.

தென்காசி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூா், ஆலங்குளம், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு தோ்தல் ஆணையம் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளது.

தோ்தல் பணியாளா்களை தோ்வு செய்தல், புதிய வாக்காளா் சோ்க்கும் பணி, வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாா் நிலையில் வைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிராம் மாநிலம் அகோலா, புல்தானா ஆகிய மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

3260 வாக்குச்சீட்டு அலகுகள், 2490 கட்டுப்பாட்டு கருவிகள், 2680 வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை இயந்திரங்கள் ஆகியவை 5 லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் தேதி காவல் பாதுகாப்புடன் மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து புறப்பட்ட லாரிகள் புதன்கிழமை தென்காசி வந்தடைந்தன. இந்த லாரிகள் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com