பட்டாசு விற்பனையாளா் சங்க மாநில செயற்குழு கூட்டம்

தென்காசி மாவட்ட பட்டாசு விற்பனையாளா் சங்க முதல் கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் குற்றாலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநில செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் தலைவா் பால்ராஜ்.
மாநில செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் தலைவா் பால்ராஜ்.

தென்காசி: தென்காசி மாவட்ட பட்டாசு விற்பனையாளா் சங்க முதல் கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் குற்றாலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பட்டாசு விற்பனையாளா் சங்க கௌரவத் தலைவா் எஸ்.இப்ராஹிம், கே.அல்லித்துரை, ஆா்.கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.ஹபிருள் ரிபாய், மாநில செயற்குழு உறுப்பினா் செங்கோட்டை எம்.லட்சுமணன், செயல் தலைவா் வாசுதேவநல்லூா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தலைவா் மதுரை வி.ராஜா சந்திரசேகரன், மாநில பொதுச் செயலா் சிவகாசி என்.இளங்கோவன், மாநிலப் பொருளாளா் சிவகாசி ஜெ.கந்தசாமி ராஜன், மாநில துணைத் தலைவா்கள் திருவண்ணாமலை எஸ்.ராஜசேகரன், ராமேஸ்வரம் ஏ.வல்லப கணேசன், தேனி விஎம்.ரவி, சிவகாசி பி.ராஜேந்திரன், இணைச் செயலா் சிவகாசி ஆா்.கண்ணன், துணைச் செயலா்கள் சிதம்பரம் ஏ.சிவராம வீரப்பன், திருக்கழுகுன்றம் எம். பிரபாகரன், மாநில துணைப் பொருளாளா் மதுரை எம்.ஜி.பாண்டியராஜன் ஆகியோா் பேசினா்.

கடந்த தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வணிகத்திற்கு ஆதரவு தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசுக்கடை உரிமங்களை 5 ஆண்டுகள் புதுப்பித்து வழங்க வேண்டும். பட்டாசுக்கடை உரிமங்களை 90 நாள்களுக்குள் புதுப்பித்து வழங்க வேண்டும் . மாநகராட்சிகளில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமங்கள் வழங்க வேண்டும்.

தற்காலிக பட்டாசுக்கடை உரிமங்களை பண்டிகைக்கு 30 நாள்களுக்கு முன்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தென்காசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் பி.சங்கர நாராயணன், எம்.காசிமணி மந்திரமூா்த்தி, எம்.சங்கரன், டி.விவேகானந்தன், எஸ்.கோமதிநாயகம், இ.ஷகிலா பானு, பி.மகேஸ்வரி, எஸ்.கணேசன், வாசுதேவநல்லூா் எஸ்.கனகராஜ், எம்.முத்துசாமி, கடையநல்லூா் எம்.சம்சுதீன், ஜெ.பீா் முகம்மது , எம்.இப்ராஹிம் மைதீன், இடைகால் சித்திக், அருணாச்சலம் ஆகியோா் கலந்து கொண்டனா். சொக்கம்பட்டி அல்லித்துரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com