‘ஐரோப்பாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை அவசியம்’

ஐரோப்பிய நாடுகளிலிருந்து தென்காசி மாவட்டத்துக்கு வரும் பயணிகள் தாங்களாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தென்காசி ஆட்சியா் கீ.சு.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து தென்காசி மாவட்டத்துக்கு வரும் பயணிகள் தாங்களாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தென்காசி ஆட்சியா் கீ.சு.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜரோப்பிய நாடுகளில் இருந்த வரும் பயணிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வந்த நாள் முதல் 14 நாள்களுக்கு சுயமாக தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் காய்ச்சல், சளி, தொடா் இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.

கொதிக்க வைத்த குடிநீரை பருகுதல், முகக் கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகளை உட்கொள்ளுதல், அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிா்த்தல் போன்ற நடைமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com