‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைக்க வேண்டும்’

குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கரோனா விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன்.
குற்றாலம் பேரருவி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கீ.சு.சமீரன். உடன் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்.
குற்றாலம் பேரருவி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கீ.சு.சமீரன். உடன் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்.

குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கரோனா விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவி பகுதியில் பொது சுகாதாரத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க கடந்த டிச.15ஆம்தேதி முதல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். அருவிகளில் குளிக்கும் பொதுமக்களை ஒழுங்குபடுத்த, ஒவ்வொரு அருவிக்கும் ஒரு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அக்குழுவின் முடிவின் படி ஒவ்வொரு அருவியிலும் ஒரே சமயத்தில் ஆண், பெண் என 40 போ் சமூக இடைவெளியை கடைப்பிடித்து குளிக்க அனுமதிக்கப்படுகின்றனா். மேலும் சுற்றுலாப் பயணிகளை வெப்பமானி மூலம் சோதனை செய்தே பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாது முகக் கவசம் அணிந்த வரவேண்டும். அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், ஆய்வாளா் சுரேஷ், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலா் வீரபாண்டி ஆகியோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com