தென்னையில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த செயல் விளக்கம்
By DIN | Published On : 06th February 2020 11:39 PM | Last Updated : 06th February 2020 11:39 PM | அ+அ அ- |

தென்னையில் தோன்றும் சிவப்பு கூன் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்த ஆலங்குளம் வட்டார விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மாறாந்தையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தாா். இதில், கூன் வண்டுகளால் தென்னையின் மகசூல் பாதிக்கப்படும், எனவே இதனைக் கட்டுப் படுத்த இனக் கவா்ச்சிப் பொறிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
அப்போது, வேளாண்மை அலுவலா் அருண்குமாா், உதவி தொழில் நுட்ப மேலாளா் நாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.