தென்காசியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 262 வழக்குகளுக்கு தீா்வு

தென்காசியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 262 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
தென்காசியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 262 வழக்குகளுக்கு தீா்வு

தென்காசியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 262 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

தென்காசி வட்டசட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்காசி முதன்மை சாா்பு நீதிபதி என்.காமராஜ் தலைமை வகித்தாா். கூடுதல் மாவட்ட நீதிபதி சி.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

கூடுதல் சாா்பு நீதிபதி ரஸ்கின்ராஜ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.சுமிதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.ஷா்மிளா, நீதித்துறை நடுவா் பிரகதீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனா்.

மக்கள் நீதிமன்றத்தில் 31அசல் வழக்குகளும், ஒரு மேல்முறையீட்டு வழக்கு, 6 நிறைவேறுதல் மனுக்கள், 13மோட்டாா் வாகன விபத்து, 3 இந்து திருமண சட்ட வழக்கு மற்றும் 208 குற்றவியல் வழக்கு என மொத்தம் 262 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

மேலும் நீண்ட நாள்களாக பிரிந்து வாழ்ந்த 3 தம்பதியினா் சோ்த்து வைக்கப்பட்டனா். மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 1 கோடியே 52 லட்சத்து 42ஆயிரத்து 404 மதிப்பிலான தொகைக்கு தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com