பாவூா்சத்திரத்தில் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 13th February 2020 01:06 AM | Last Updated : 13th February 2020 01:06 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுதநாடாா் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் பிரிவில் பயிலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
சென்னை தனியாா் நிறுவன மேலாளா்கள் பிரேம்குமாா், சரவணன், மணிகண்டன் ஆகியோா் நோ்முக தோ்வு நடத்தினா்.
இதில், 7 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு கல்லூரித் தாளாளா் காளியப்பன், ஆலோசகா் பாலசுப்பிரமணியன், முதல்வா் ரமேஷ், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். ஏற்பாடுகளை, கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலா் மணிராஜ், துறைத் தலைவா்கள் செய்திருந்தனா்.