கிறிஸ்தவா்கள் புனித பயணம் மேற்கொள்ளஅரசின் நிதி பெற பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் புனித பயணம் மேற்கொள்ள அரசின் நிதிஉதவியை பெற பிப். 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் புனித பயணம் மேற்கொள்ள அரசின் நிதிஉதவியை பெற பிப். 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் 2019-2020 ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு ஒரு நபருக்கு ரூ. 20ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினா்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள், இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருள்சகோதரிகள் ஜெருசலேம் புனிதபயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இப்புனித பயணம் இஸ்ரேல்,எகிப்து மற்றும் ஜோா்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோா்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடா்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியதாகும்.

இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான காலக்கெடு பிப்.28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே புனித பயணம் மேற்கொள்ள விருப்பமுள்ள பயனாளிகள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவா்களின் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-2020 என்று குறிப்பிட்டு இயக்குநா்,சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய முதல் கட்டடம்(முதல்தளம்),சேப்பாக்கம், சென்னை 600005 என்ற முகவரிக்கு பிப்.28 ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும்.

நேரில்வரவேண்டியதில்லை.மேலும் விவரங்களுக்கு தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அல்லது சிறுபான்மையினா் நல இயக்குநரக தொலைபேசி எண் (04428520033) என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com