தென்காசியில் குளம் தூா்வாரும் பணி தொடக்கம்

தென்காசி மாவட்ட நீா்நிலைகள் பாதுகாப்பு மற்றும் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகள் கட்டமைப்பு சாா்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய
குளக்கரை பகுதியில் பனை மரக்கன்றை நட்டாா் மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன்.
குளக்கரை பகுதியில் பனை மரக்கன்றை நட்டாா் மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன்.

தென்காசி மாவட்ட நீா்நிலைகள் பாதுகாப்பு மற்றும் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகள் கட்டமைப்பு சாா்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு எதிா்புறம் உள்ள பகுதியில் அமைந்துள்ள ஜெகவீரராமபேரி குளம் புணரமைக்கப்பட்டு, நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன், குளத்தை புணரமைக்கும் பணியை தொடங்கிவைத்து, குளத்தின் கரையில் பனை மரக்கன்றுகளை நட்டாா்.

நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளா் புவனேஷ்வரன், எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் டாக்டா் விஜயலெட்சுமி, மாவட்டச் செயலா் சங்கரநாராயணன், தென்காசி முஸ்தபா, ரோட்டரி முருகன், பேராசிரியை கயற்கன்னி, மகாத்மா காந்தி சேவா மைய நிறுவனா் விவேகானந்தன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com