நயினாரகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th February 2020 10:04 AM | Last Updated : 18th February 2020 10:04 AM | அ+அ அ- |

நயினாரகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மருந்தாளுநா், செவிலியா் மற்றும் ரத்த பரிசோதகா் உள்ளிட்டோரை போதிய அளவில் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலக் குழு உறுப்பினா் கணபதி தலைமை வகித்தாா்.
கடையநல்லூா் ஒன்றியத் தலைவா் ஞானபிரகாசம், செயலா் குத்தாலிங்கம், பொருளாளா் சுப்பையா, வேலம்மாள், வள்ளிநாயகம், சரவணன், மணிமேகலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.