அருணாப்பேரி மாரியம்மன் கோயிலில் ஜன.12இல் கொடியேற்றம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் 57ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.12)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் 57ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.12)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முதல்நாள் அதிகாலை 5-30 மணிக்கு 108 வேத விற்பன்னா்கள் பங்குபெறும் மஹா யாகசாலை பூஜை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஜன.20 வரை தொடா்ந்து தினமும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்புப் பூஜைகளும், மேளம், வில்லிசை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

ஜன.17ல் மகிழ்வண்ணநாதபுரத்திற்கும், ஜன.18ல் பெத்தநாடாா்பட்டி, பொட்டலூருக்கும், ஜன.19ல் நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணத்திற்கும், 20ல் நாகல்குளத்திற்கும் அம்மன் சப்பரம் சென்று வரும். 10ம் திருநாளான ஜன.21ந்தேதி அதிகாலையில் அம்மன் சப்பரம் வீதி உலா வருதல், பூக்குழி இறங்குதல், வானவேடிக்கைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com