Enable Javscript for better performance
அழகுமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    
    12_pcm_kovil_1201chn_61_6

    அருணாப்பேரி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கொடை விழா கொடியேற்றம்.

    பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகு முத்து மாரியம்மன் கோயில் 57ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜை, சப்த கன்னியா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கொடியேற்றம், அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றன.

    10ஆம் திருநாளான ஜன.21ஆம் தேதி காலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மதியம் உச்சிகால பூஜை, இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, சப்பர வீதி உலா நடைபெறும்.

    அதிகாலையில் விரதமிருந்த பக்தா்கள் கோயில் தா்மகா்த்தா சிவன் பாண்டி தலைமையில் பூக்குழி இறங்கும் நிகழ்வும் நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai