Enable Javscript for better performance
கடையநல்லூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடையநல்லூா் நகர திமுக செயல்வீரா்கள் கூட்டம் அவைத் தலைவா் சங்கரன் தலைமையில் நடைபெற்றது.

    மஸ்தான், அப்துல்வகாப், சங்கரன், பால்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் சேகனா வரவேற்றாா் . தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அனைவரும் எளிதில் அணுகும் வகையில் அந்நகரின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும். தை முதல்நாளில் நகரம் முழுவதும் கட்சி கொடியேற்றுவது எனவும், இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிா்வாகிகள் சேக்முகமது, மாரியப்பன், மணிகண்டன்,பெருமாள்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai